குரூப் 2,2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு; 10-ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணிகளுக்கான TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று நடத்தப்பட்டது. ]
TNPSC Gr-2/2A முதன்மைத் தேர்வுக்கு ( MAINS) தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 10.11.2025 திங்கள் கிழமை காலை 10:30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

Smart Board பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்படும். மேலும் வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்க்காணும் லிங்க் ஐ கிளிக் செய்து Google Forms படிவத்தை உடன் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







