தென்மண்டல கபடி போட்டி: சிவகாசி கல்லூரி அணி 8 வது இடம்
தென்மண்டல அளவிலான கபடி போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது இப்போட்டியில் சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி கபடி அணி 8 ம் இடம் பெற்று ரூ 6 ஆயிரம் காசோலை மற்றும் சுழற் கோப்பை பரிசாக பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியின் வீரர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோரை கல்லூரி சேர்மன் ராகவன்,துணை சேர்மன் பிருந்தாராகவன், முதல்வர் குமார் டீன் மோதிலால் ஆகியோர் பாராட்டினார்கள்.







