கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 4-ந்தேதி தொடக்கம்
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 15ந் தேதி முடிவடைகிறது,
நிகழச்சி விவரம் வருமாறு:-
1 வது நாள்: 4.11.2025
ரேவதி நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் துலா லக்கனத்தில் கொடியேற்றுதல் மண்டகப்படிதாரர் : திருக்கோயில்.
இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : பிராமணாள் சமூகம், கோவில்பட்டி .

2 வது நாள் : 5.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி
காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : .அ.பூலோகப்பாண்டியத் தேவர்
.அ.ரத்தினவேல்ச்சாமித் தேவர் குடும்பத்தினர் இனாம்மணியாச்சி.
3 வது நாள்: 6.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர்: இல்லத்துப்பிள்ளைமார் சங்கம், கோவில்பட்டி.

4 வது நாள் 7.11.2025 :
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.
மண்டகப்படிதாரர்: மேடைத்தளவாய் கட்டளை, திருநெல்வேலி.
5 வது நாள் 8.11.2025:
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணிகாமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கம், கோவில்பட்டி.
இரவு 8.00 மணிக்கு: சன்டிவி புகழ். இராம.பூதத்தான் தலைமையில் பட்டிமன்றம்
6 வது நாள்: 9.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் வெ.சு.அழகிரிசாமி செட்டியார் அகாசுக்கடை தூத்துக்குடி.
இரவு 8.00 மணிக்கு: ச.சுப்பிரமணியன் ஓதுவார் தலைமையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

7 வது நாள்: 10.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர்: சைவவேளாளர்கள் சங்கம், கோவில்பட்டி.
8 வது நாள்: 11.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : சைவசெட்டியார்கள் சங்கம், கோவில்பட்டி.
9 வது நாள்: 12.11.2025
காலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் ரதாரோகணம் காலை 9.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்
மண்டகப்படிதாரர் : வணிக வைசிய சங்கம், கோவில்பட்டி.
இரவு 7.30 மணி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : வணிக வைசிய சங்கம், கோவில்பட்டி.
10 வது நாள்: 13.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : ஆயிர வைசிய காசுக்காரச் செட்டிப் பிள்ளைகள் சங்கம், கோவில்பட்டி.

11 வது நாள் : 14.11.2025
பகல் 1.00 மணி தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளல்
இரவு 6.00 மணி சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்தல். காட்சி
மண்டகப்படிதாரர் : எல்.இராமலிங்கம் குடும்பத்தினர், திருநெல்வேலி. தபசு மண்டகப்படிதாரர் : மூவேந்தர் பண்பாட்டுக் கழகம், கோவில்பட்டி.
12 வது நாள் : 15.11.2025
காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஏகாதசி திதியும் உத்திர நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்தில் அம்மன் பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறும்.
மண்டகப்படிதாரர் :எம்.எஸ்.ஆவுடையப்பன்செட்டியார் குடும்பத்தினர், முடுக்குமீண்டான்பட்டி







