கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆண் நண்பருடன் காரில் இருந்த போது மொபட்டில் வந்த 3 பேர் 3 பேர் ஆண் நண்பரை தாக்கி அரிவாளால் வெட்டி சாய்த்தனர்,. பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர்..
இந்த கொடுஞ்செயல் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தலைமறைவாக இருந்த அந்த 3 பேரை போலீசார் பிடிக்கச் சென்றபோது,அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் சந்திரசேகர் என்ற போலீஸ்காரருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும்போது 3 பேர் காலிலும் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்த நிலையில், தப்பி ஓட முடியாமல் 3 பேரும் கீழே விழுந்தனர்.
உடனே போலீஸ் படையினர் மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோருக்கு இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது இதனையடுத்து 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ்காரர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலீசிடம் சிக்கிய 3 பெரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்., இருகூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன,. மேலும் தீவிர விசாரணை நடக்கிறது.







