பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள மரமங்களை மறைக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணம் என்ன? […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி சரக்கு வாகனம் அதிவேகமாக சென்றது. இதனை பார்த்த போக்குவரத்து காவலர் அருண் விக்னேஷ் , அந்த சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் செல்லப்படுவது தெரியவந்தது. இதையெடுத்து அவர் அந்த வாகனம் மற்றும் வாகனத்தில் வந்தவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் […]
கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்ற 95 வது மாதக்கூட்டம். நடைபெற்றது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். எட்டயபுரம் பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் புதுகை பாரதி, “மனசே மகிழ்ச்சிப் பழகு” என்ற தலைப்பில் பேசினார். 2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல்நிலைய விருதினைப் பெற்ற – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 1330 திருக்குறள்களில் – எதைக் […]
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற 54 ஆம் ஆண்டு ஆய்வுப் பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார், மன்ற புரவலர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டை பேராசிரியர். அந்தோணிராசு” தெவிட்டாத தாலாட்டு ” என்னும் பொருளில் ஆய்வுரை செய்தார். மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி தொகுத்து வழங்க, மன்ற செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்று பேசினார். கவிதாயினி விநாயக சுந்தரி, கவிஞர் கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் […]
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை வீடு வீடாகச் சென்று கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அரசு அறிவித்த ரூ.10 […]
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்த முதல் அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் நேற்று இரவே விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வந்தடைந்தார்,. இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். […]
கரூரில் நேற்று நடந்த தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார் இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து […]
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான தூத்துக்குடி மண்டல ஆக்கி போட்டி இன்று தொடங்கியது, இப்போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி சிவகங்கை மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி ஆகிய அணிகள் பங்கு பெறுகின்றன இப்போட்டி லீக் முறையில் நடைபெறுகிறது இன்று காலை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா மற்றும் […]
த.வெ.க. தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அனால் விஜய் பிரசாரம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. மாலையில் தான் விஜய் வந்தார். நாமக்கல் பிரசாரத்தை முடித்து விட்டு கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது இரவு ஆகி விட்டது,. விஜய் பேசி முடித்து கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி […]
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர் .50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]







