தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி; கோவில்பட்டியில் தொடங்கியது

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான தூத்துக்குடி மண்டல ஆக்கி போட்டி இன்று தொடங்கியது,
இப்போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி சிவகங்கை மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி ஆகிய அணிகள் பங்கு பெறுகின்றன இப்போட்டி லீக் முறையில் நடைபெறுகிறது
இன்று காலை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா மற்றும் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் போட்டியை ததொடங்கி வைத்தார்கள்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் சாமி ராஜன், தலைமை ஆசிரியர் அருணாசலம் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் சசிகுமார் ராம்குமார் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடக்க விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினர்கள் சுரேஷ்குமார், முருகன் , கிருஷ்ணமூர்த்தி, மனோஜ் குமார், தனசேகரன், மாயாண்டி, அன்ன ராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர்
முதல் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி 3-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியைவீழ்த்தி வெற்றி பெற்றது
இரண்டாவது போட்டியில் சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி 8-0 கோல் கணக்கில் தென்காசி ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3-1 கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி 6-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் சிவகங்கை புனித ஜோசப் பள்ளி விளையாடிய போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில்முடிந்தது

முன்னாள் இந்திய ஆக்கி அணி வீரர் அஸ்வின் , முன்னாள் தேசிய வீரர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் ஒருங்கிணைந்த அணி தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.
நடுவர் மேலாளராக காளிதாஸ், நடுவர்களாக கார்த்திக் ராஜா, மதன்குமார், சதீஷ்குமார், சேவியர், அழகுராஜா, ராம் கார்த்தி, சிவானந்த, ஆகியோர் செயல்படுகின்றனர்.
இப் போட்டியில் முதலிடம் பெறும் அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறும். மேலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணிக்கு தேர்வு செய்யபப்ட்டு மாநில போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்







