கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி., அரசு நிவாரண தொகை வழங்கினார்
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை வீடு வீடாகச் சென்று கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்







