கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு



கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்த முதல் அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் நேற்று இரவே விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வந்தடைந்தார்,.

இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் குறித்தும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் தேவையான உதவிகள் குறித்தும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எஸ். ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன்,.எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி,. சிவ.வீ. மெய்யநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் .வி. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.தங்கவேல், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்.வே. சரவணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன்அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை. என தெரிவித்தார் .
=







