கவிஞர் சிவானந்தம் எழுதிய “வான்புகழ் வள்ளுவர் ” நூல் வெளியீடு
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற 54 ஆம் ஆண்டு ஆய்வுப் பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார், மன்ற புரவலர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை பேராசிரியர். அந்தோணிராசு” தெவிட்டாத தாலாட்டு ” என்னும் பொருளில் ஆய்வுரை செய்தார். மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி தொகுத்து வழங்க, மன்ற செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.
கவிதாயினி விநாயக சுந்தரி, கவிஞர் கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கவிஞர் சிவானந்தம் எழுதிய “வான்புகழ் வள்ளுவர் ” என்னும் நூலை விநாயகா ரமேஷ் வெளியிட மன்றத் தலைவர் பேராசிரியர். கருத்தப்பாண்டி, செஞ்சொல்லாளர் சரவணச் செல்வன், தேசிய நல்லாசிரியர் ராஜாமணி , கவிஞர் போத்திராசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்
திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மாணவ – மாணவிகளின் திருக்குறள் நிகழ்வுகள் நடைபெற்றன.முடிவில் மன்றத் தலைவர் முனைவர் கருத்த பாண்டி நன்றி கூறினார்.







