திருக்குறளில் சாதனை: மாணவி அனுஷாவுக்கு இளம் சாதனையாளர் விருது
கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்ற 95 வது மாதக்கூட்டம். நடைபெற்றது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். எட்டயபுரம் பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் புதுகை பாரதி, “மனசே மகிழ்ச்சிப் பழகு” என்ற தலைப்பில் பேசினார். 2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல்நிலைய விருதினைப் பெற்ற – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
1330 திருக்குறள்களில் – எதைக் கேட்டாலும் சொல்லுகின்ற சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி 8ம் வகுப்புமாணவி அனுஷா – அனைவருடைய பாராட்டையும் பெற்றார்… அவருக்கு மகிழ்வோர் மன்றம் சார்பில் – இளம் சாதனையாளர் விருது ” வழங்கப்பட்டது.

பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகிழ்வோர் மன்ற இயக்குநர் ஜான் கணேஷ், மன்றக் காப்பாளர்கள் சேர்மத்துரை, செல்வின், துரைராஜ், அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முனியப்பன், மணிமதி, கழுகுமலை திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலர் முருகன், போத்தி ராஜ், கம்பன் கழகச் செயலாளர் சரவணச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







