தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 22ஆம் தேதி பகல் 11 மணிக்கு காளி பூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுடம், 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறும். 23ஆம் தேதி அதிகாலையில் கொடிப்பட்ட ஊர்வலத்தையடுத்து, 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், […]
சாகித்திய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி கோட்டாட்சியர் ஹிமான்ஷு மங்கல், நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் கி.ராஜநாராயணன் மகன்கள் திவாகர், பிரபாகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,ஜெயகண்ணன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் […]
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம்.நேற்று தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்த கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது, மாலை நேரத்தில் அந்த லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அந்த லாரியில் டிரைவராக பணிபுரியும் கொலக்கட்டாங்குறிச் சியை சேர்ந்த மணிகண்டன் தூத்துக்குடியில் இருந்து சிவகாசிக்கு அட்டை […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவ கஞ்சி; பொது நல அறக்கட்டளை ஏற்பாடு
கோவில்பட்டி அரசு மருத்துவமனை யில் கடந்த ஒரு வருடமாக ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்ட ளையின் தலைவர் ராஜே ந்திரன் தலைமையில் அதன் உடலுக்கு வலிமை தரும், நோய் தடுப்பு மருத்துவக் கஞ்சி இலவசமாக வழங்கி வருகின்றனர். இம்மருத்துவ கஞ்சியில் சீரகச்சம்பா அரிசி, பாசிப் பருப்பு, இஞ்சி, பூண்டு, புதினா, மிளகு, சீரகம், வெந்தயம், சுக்கு, திப் பிலி, ஜாதிக்காய், தேங் காய்ப்பால், முந்திரிப்பருப்பு, முருங்கைக்கீரை, உள்ளிட்ட 27 மருத்துவ குணம் கொண்ட பொருட் களைக் கொண்டு […]
கோவில்பட்டி, ஊருணி 2-வது தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (27). தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்தி கத்தி, பிளேடால் முனியசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி பிணமானார். இதை தொடர்ந்து ராகுல்காந்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சென்று,குடும்பத் தகராறு காரணமாக தந்தை முனியசாமியை […]
நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:- நீதி மன்ற ஆணையில் இரு தரப்பினருக்கும் இடையிலான சமரசம் ஒப்பந்தம் அவர்களின் 1-1 ஒப்பந்தங்கள் 10.3.2022 முதல் 9.3.2025 வரை இருந்து வந்தது. நடந்துகொண்டிருக்கும் தயாரிப்புகளுக்கான தற்போதைய விதிமுறைகளைப் பராமரிக்கவும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும் இரு சாராரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்பப் பெறுதல் […]
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. […]
இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் வெகு மக்கள் பிரிவான ஐ. என்.டி.சி. மக்கள் மன்றம் சார்பில், “காய்கறி மருத்துவம்” என்ற தலைப்பில் சாத்தூர் ஐ. என். டி. சி. அலுவலக கூட்ட அரங்கில் “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஆவுடேஸ்வரி தொடக்கவுரை ஆற்றினார். கோவில்பட்டி முன்னாள் வேளாண்மை அறிவியல் ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர் கோ. சுரேஷ்குமார் கலந்து கொண்டு மனித உடல் ஆரோக்கியத்தில் காய்கறிகள், […]
கோவில்பட்டி அருகே நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியின் 66 வது ஆண்டுவிழா, விளையாட்டு விழா,கலை விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டுவிழாவுக்கு முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்,தேசியமாணவர் படை அணி வகுப்பு மரியாதையை காவல்துறை ஆய்வாளர் முருகேசன் ஏற்றார். ஒலிம்பிக் தீபத்தை மாவட்ட உடற்கல்வி ஆய்லாளர் கண்ணதாசன் ஏற்றினார். விளையாட்டு போட்டிகளை காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தொடங்கி வைத்து பேசினார், பின்னர் உறவின்முறை தலைவர் மாரிகண்ணபிரான் பள்ளி நிர்வாகக்குழு […]







