பிளேடால் கழுத்தை அறுத்து தந்தையை கொன்ற மகன்; கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி, ஊருணி 2-வது தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முனியசாமி (55). இவரது மகன் ராகுல்காந்தி (27). தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்தி கத்தி, பிளேடால் முனியசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி பிணமானார்.

இதை தொடர்ந்து ராகுல்காந்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சென்று,குடும்பத் தகராறு காரணமாக தந்தை முனியசாமியை கொலை செய்துவிட்டதாகக கூறினார்.
போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முனியசாமி உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜகநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலை நடந்த போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறபபடுகிறது,.இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்







