நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி 66 வது ஆண்டுவிழா

கோவில்பட்டி அருகே நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியின் 66 வது ஆண்டுவிழா, விளையாட்டு விழா,கலை விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
விளையாட்டுவிழாவுக்கு முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்,தேசியமாணவர் படை அணி வகுப்பு மரியாதையை காவல்துறை ஆய்வாளர் முருகேசன் ஏற்றார். ஒலிம்பிக் தீபத்தை மாவட்ட உடற்கல்வி ஆய்லாளர் கண்ணதாசன் ஏற்றினார். விளையாட்டு போட்டிகளை காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தொடங்கி வைத்து பேசினார்,
பின்னர் உறவின்முறை தலைவர் மாரிகண்ணபிரான் பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தங்கமணி ஆகியோர் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது 10, 11, 12 ஆம் வகுப்புகளில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கும் , பாடங்களில் நூறு சதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் படங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களுக்கும், துணை நின்ற ஆசிரியர்களுக்கும் முதன்மை விருந்தினர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பரிசுகள் வழங்கி பாராட்டினார் .

அனைத்து ஆசிரியர் அலுவலர்களுக்கும் சென்னை உறவின்முறை நிர்வாகிகள் திராவிட மணி, சொர்ணமாரி பாண்டியன், ராமர் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கும், மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் தகுதி படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
10,11,12 ஆம் வகுப்புகளில் தமிழ் பாடத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் தமிழ் காவலன் ரொக்கப் பரிசுகளை வழங்கினர். என்.சி. சி படைப்பிரிவில் தலைமை அதிகாரியாக பதவி உயர் பெற்ற ஜான் ஸ்டேனி ஆசிரியருக்கு நினைவு பரிசு நிர்வாகம் சார்பில் வழங்கி பாராட்டினர். இறுதியாக மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்வி புரவலர் மதி மாரியப்பன், முன்னாள் தலைவர் காசிராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக பள்ளிச் செயலாளர் பேராசிரியர் பால்பாண்டியன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் ஜான் ஸ்டேனி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கவுண்டன்பட்டி மேனாள் பஞ்சாயத்து தலைவி காளிமுத்து சமுத்திரக்கனி, நாகலாபுரம் வட்டார வளர்ச்சி குழு நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், தெய்வ ராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, சிவ சக்திவேல், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேனாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியம், இலக்கிய அணி அமைப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, முதுகலை தமிழ் ஆசிரியை உமா மற்றும் ஆசிரியர்கள் கவிதா, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, சாந்தி, வாசுகி, காளீஸ்வரி, முத்துச்செல்வி, அணு முத்து, ரமேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
முதுகலை ஆசிரியர்கள் கௌதம், குணசேகரன் சத்திய நாராயணன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.







