103-வது பிறந்தநாள்: கி. ராஜ நாராயணன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
சாகித்திய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் ஹிமான்ஷு மங்கல், நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் கி.ராஜநாராயணன் மகன்கள் திவாகர், பிரபாகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,ஜெயகண்ணன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், யூனியன் முன்னாள் துணைச் சேர்மன் சுப்புராஜ் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்
கி.ராஜநாராயணன் சிலைக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் உதயசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி கிளைத்தலைவர்,ஆசிரியை மணிமொழிநங்கை, செயலாளர்,பள்ளி முதல்வர் பிரபு,பொருளாளர், ஆசிரியை கண்ணகி, உறுப்பினர்கள் நல்லாசிரியர் முருகேசன், ஆசிரியர் தினகரன், சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்







