மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 21-ம் தேதி நடைபெற்றது. மாநாட்டில், 2500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் “உங்கள் விஜய்…. நான் வரேன்…” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் வலம் வந்தார்.. அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி […]
தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் வருமாறு :- *கோவில்பட்டியில் தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ள ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். *ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன […]
கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராமத்தில் வாறுகால், சாலை வசதிகள் செய்து தர வேண்டும். தெற்கு திட்டங்குளம் நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும். திட்டங்குளம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது. கல்குவாரி மற்றும் சரள் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி, எம்-சாண்ட் மற்றும் சல்லி கற்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக கிழக்கு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த […]
கோவில்பட்டி இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர் சமூக சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் 9ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை நகர்மன்ற தலைவர், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கோவில்பட்டி நகர கிழக்கு திமுக செயலாளர், நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்க தலைவர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் அபூர்வா தலைமையிலான குழுவினர், பொதுமக்களுக்கு கிட்ட மற்றும் தூரப்பார்வை, வெள்ளெழுத்து, […]
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நடந்தது. கோவில்பட்டி நாடார் […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட கால வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இங்குள்ள மக்களில் 300 பேர் வரை மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் […]
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவாஅறக்கட் டளையின் 4வது ஆண்டுவிழா மற்றும் மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாராட்டு , ஆன்மிக சொற்பொழிவு என முப்பெரும் விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப் பினர்கள் நடராஜன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜ்ரங் நர்த்தனாலயா மாணவிகளின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து ‘இதோ எந் […]
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை தேர்வு செய்ததில் சில புவியியல் தகவல்கள் மறைந்து […]
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலினை அங்கிள் என்று கூறி இருந்தார். விஜய்யின் பேச்சு தரம் தாழ்ந்த வகையில் இருப்பதாகவும் வரும் தேர்தலில் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று திமுகவினர் பேசி வரும் நிலையில், விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் […]
சாரண சாரணிய இயக்கம் தென்மண்டல பெருந்திரளணி திருநெல்வேலி மாவட்டம் மருதக்குளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் 21.8.2025 முதல் 23.8.2025 வரை நடைபெற்றது. 39 கல்வி மாவட்டத்தில் 700 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் , தலைமை ஆசிரியர் பா.பிரபாவதி வழிகாட்டுதலின்படி கூடாரம் அமைத்தல் போட்டியில் முதலிடமும்,colour party போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்துள்ளார்கள். பெருந்திரளணியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் […]







