வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட கால வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்.

பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இங்குள்ள மக்களில் 300 பேர் வரை மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகாக்குழு உறுப்பினர் மணிகண்டன், மந்தித்தோப்பு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







