கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 28 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது.
இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நடந்தது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கி, காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நகர்மன்ற துணைத் தலைவரும், கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ், தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன், பள்ளிச் செயலாளர் என்ஜினியர் நடராஜன், தலைமை ஆசிரியை செல்வி, நகராட்சி அலுவலர்கள் சேதுராஜன்,வசுமதி, கிருஷ்ணகுமார், கவுன்சிலர்கள் சித்ராதேவி, உலகராணி, மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.

இதேபோன்று, கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை திமுக கிழக்கு நகரச்செயலாளர், நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.
பள்ளிச் செயலாளர் சுப்பிரமணியன், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 28 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.







