கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர் சமூக சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் 9ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.

முகாமை நகர்மன்ற தலைவர், திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கோவில்பட்டி நகர கிழக்கு திமுக செயலாளர், நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்க தலைவர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர் அபூர்வா தலைமையிலான குழுவினர், பொதுமக்களுக்கு கிட்ட மற்றும் தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்நீர் அழுத்த பரிசோதனைகள் மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கினர்.
புதுக்கிராமம் சக்திவிநாயகர் திருக்கோயில் விழாக்குழு தலைவர் ராமமூர்த்தி, இளைஞர் சமூக சங்கத்தைச் சேர்ந்த என்ஜினியர் தனசேகரன்,மாரியப்பன், கவுன்சிலர் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







