கோவில்பட்டி ராகவேந்திரா அறக்கட்டளை 4 வது ஆண்டு விழா: மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாராட்டு
Oplus_16908288


கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவாஅறக்கட் டளையின் 4வது ஆண்டுவிழா மற்றும் மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாராட்டு , ஆன்மிக சொற்பொழிவு என முப்பெரும் விழா நடை பெற்றது.
இவ்விழாவிற்கு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.தலைவர் ஜெயக்கொடி, பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப் பினர்கள் நடராஜன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பஜ்ரங் நர்த்தனாலயா மாணவிகளின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
அதனை தொடர்ந்து ‘இதோ எந் தன் தெய்வம் ‘என்ற தலைப்பில் மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.மேலும் சிறப்பு அழைப்பாளர்களை கவுரவித்தார்.
பின்னர் சமூக ஆர்வலர்கள், ரத்ததானம் செய்தோர்,பத்திரிகையாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்ததைத் தொடர்ந்து புதிய அறக்கட்டளை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து மாதம் தோறும் அன்னதானம் வழங்கியவர்களை கவுரவித்து சிறப்பித்தனர்

கோவில்பட்டி நகர பகுதியில் பல்லாயிரக்கணக்கான மரங்களை நடவு செய்த ஜீவ அனுக்கிரக அறக்கட்டளையின் நிறுவனர் ராஜேந்திரனை பாராட்டி நினைவு பரிசு வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந் தினர்களாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜகநாதன்
தனி வட்டாட்சியர் சரவணபெருமாள், அரசு தலைமை மருத்துவனை டாக்டர் வெங்கடேஷ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, மேற்கு காவல் நிலைய . உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி, கோவில்பட்டி வக்கீல்கள் சங்க தலைவர் சங்கர் கணேஷ், செயலாளர் ரேவதி ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். அதைத் தொடர்ந்து ராகவேந்திரா சேவா அறக்கட்டளை உறுப்பி னர்களை அறிமுகம் செய்து வைத்து மாதம் தோறும் அன்னதானம் வழங்கியவர்களை கவுரவித்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் நிர் வாகிகள் மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் நகரகூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் லவராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.







