கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கை மனு

தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் வருமாறு :-
*கோவில்பட்டியில் தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ள ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
*ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.







