கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி, சுபா நகரில் உள்ள விஜயகணபதி கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தையும் சுத்தம் செய்யும் பணியை மாணவ மாணவியர்கள் செய்தனர். கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமையில்,நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தை முறையாக சுத்தப்படுத்தினர். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கோவிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டினர். நிகழ்வுக்கான […]
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தேசிய சமரச தீர்வு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களில் […]
நீரின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வசதிகள் போன்ற பல தகுதிகளை கொண்ட கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரை முதல் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை ஆகும். அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை நீலக்கொடி சான்றிதழை பெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்புதுப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை கடற்கரைகள் என மொத்தம் 6 கடற்கரைகள் […]
கோவில்பட்டி கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெய்யக் கூடிய பருவ மழையை நம்பி உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது. அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்நிலையில் […]
கோவில்பட்டி புதுக்கிராமம் சக்திவிநாயகர் கோவிலில் 36ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். […]
பீகாரில் ராகுல்காந்தி பேரணியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு; “இந்தியாவின் எதிர்காலம் “ என்று கனிமொழி
“Future of INDIA (இந்தியாவின் எதிர்காலம்)” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பதிவு செய்துள்ளார் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார்குடியிருப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 65), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் அப்பகுதியில் நடந்த விழாவில், பந்தி வைப்பதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். ‘ ‘ இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பின்னர் துரைப்பாண்டி […]
தூத்துக்குடியில் நுரையுடன் கூடிய தண்ணீரை வெளியேற்றி தீயை கட்டுப்படுத்தும் தீயணைப்பு வாகனங்கள் இயக்கி
தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு துறைமுகம், அனல் மின் நிலையங்கள், உர தொழிற்சாலை உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் ஆபத்தான பொருட்கள் அதிக அளவில் கையாளப்படுகின்றன. பாதுகாப்பாக தொழிற்சாலைகள் இயங்கி வந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த தீ விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதையும், ஏற்பட்டு வரும் திடீர் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் […]
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்கள் திரண்டு வந்து விநாயகரை தரிசித்து சென்றனர். விக்ன விநாயகர் கோவில் கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் அருள்பாலித்து வரும் விக்ன […]
உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினுடன், மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான […]







