குலசேகரப்பட்டினம் உள்பட 6 கடற்கரைகள் ‘நீலக்கொடி’ சான்றிதழ் பெற தேர்வு
நீரின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா வசதிகள் போன்ற பல தகுதிகளை கொண்ட கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரை முதல் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை ஆகும். அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை நீலக்கொடி சான்றிதழை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்புதுப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை கடற்கரைகள் என மொத்தம் 6 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் கீழ் 33 விதமான அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.







