கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகள்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி, சுபா நகரில் உள்ள விஜயகணபதி கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தையும் சுத்தம் செய்யும் பணியை மாணவ மாணவியர்கள் செய்தனர்.

கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமையில்,நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கோவில் மற்றும் கல்லூரி வளாகத்தை முறையாக சுத்தப்படுத்தினர்.
கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கோவிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டினர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கீதாராணி மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.







