பாண்டவர் மங்கலத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
முகாமில், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதில், பட்டா பெயர் மாற்றம், மின்வாரிய இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்ட மக்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

முகாமில், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ரத்தினகுமார், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







