விநாயக சதுர்த்தி : கோவில்பட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் விக்னவினாயக்ர் கோவில்
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்கள் திரண்டு வந்து விநாயகரை தரிசித்து சென்றனர்.
விக்ன விநாயகர் கோவில்

கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் அருள்பாலித்து வரும் விக்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 8மணி முதல் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடை பெற்றது, அதைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளை கார்த்தி நடத்தினார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர், கோவில் கமிட்டியை சேர்ந்த கோலப்பன், கனகராஜ் ,கோபாலகிருஷ்ணன், அழகு ,சக்தி, பாஸ்கர், வேலுச்சாமி, மற்றும் சக்தி எண்டர் பிரைசஸ் முருகேஷ், ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார், பாஜக நிர்வாகி கற்பூர ராஜ், `திருமால் ஹவுசிங் ‘ரமேஷ், புருசோத்தமன் உள்பட பலர் பூஜையில் கலந்து கொண்டனர்,.

பூஜை முடிந்ததும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள தரிசனம் செய்து சுவாமி பிரசாதம் பெற்றனர். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே கோவில் சார்பில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தேங்காய் சாதம், புளியோதரை, சுண்டல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வாங்கி சென்றனர்,.
வெற்றிவிநாயகர் கோவில்

கோவில்பட்டி காமராஜர் நகர் அன்பு கார்டன் பகுதியில் அமைந்துள்ள இரட்டை வெற்றிவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. தெப்பக்குளம் சிவசக்தி விநாயகர் கோவில் முன்பிருந்து 108 பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் புறப்பட்டு மாதாங்கோவில் ரோடு, எட்டையபுரம் ரோடு, மந்தித்தோப்பு ரோடு வழியாக வெற்றி விநாயகர் கோவிலை அடைந்தது.தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம்,தீபாரதனை நடைபெற்றது

பால்குடம் ஊர்வலத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் தொடங்கி வைத்தார்.வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயகண்ணன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு வக்கீல் பழனிக்குமார்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஹரிஹரன்,சுப்பிரமணியன், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்







