விநாயகர் சதுர்த்தி விழா : சிவன், பார்வதி, விநாயகர், முருகர் வேடமணிந்த சிறுவர்கள்


கோவில்பட்டி புதுக்கிராமம் சக்திவிநாயகர் கோவிலில் 36ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தில் சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன. மேலும், சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமடைந்து சிறுவர்கள் வந்தனர்.
மெயின் ரோடு, புதுக்கிராமம் வழியாக சக்தி விநாயகர் கோயிலை சென்றடைந்தது. அங்கு சக்தி விநாயகருக்கு பால் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர், திமுக நகரச்செயலாளர் கருணாநிதி, சக்திவிநாயகர் கோவில் விழாக்குழு தலைவர் ராமமூர்த்தி, இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கத்தலைவர் சங்கரன், செயலாளர் முருகன்,பொருளாளர் பழனி மாரியப்பன், துணைத்தலைவர் வெங்கடேஸ்வரன், துணைச் செயலாளர் சங்கரநாராயணன், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் சண்முகசுந்தரம், முத்துராஜ், திமுக கிழக்கு நகரச்செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர் சங்கக்தலைவர் சுரேஷ்,செயலாளர் முருகன்,பொருளாளர் வேல்முருகன் துணைத்தலைவர் மாரியப்பன்,துணைச்செயலாளர் தங்கமாரியப்பன், துணைப்பொருளாளர் மாரிக்கண்ணன் சங்க ஆலோசகர்கள்,அதிமுக நிர்வாகி மகேஷ் பாலா மற்றும் விழாக்கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







