மழைச்சேத நிவாரண தொகை பெற்றுக்கொடுங்கள்; கனிமொழி எம்.பி.க்கு; கரிசல் பூமி விவசாயிகள் சங்கம்
கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் தென்பகுதி நிலங்கள் ஆற்றுப் பாசனமும் வட பகுதி வானம் பார்த்த மானாவாரி நிலங்கள் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யக்கூடியதாகும். இரண்டாவது முறையாக தூத்துக்குடி எம்பி ஆக இருக்கும் கனிமொழி . மாவட்டத்தின் அனைத்து பகுதிகள் பற்றியும், வாழ்வியல் பற்றியும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஆற்றுப்பாசன விவசாயிகள் எந்த வகையிலாவது மகசூல் எடுத்து விடுவார்கள். ஆனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர்,ஒட்டப்பிடாரம் […]







