போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

தூத்துக்குடி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் – கோவில்பட்டி (தலைமை) ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சிதம்பர நாடார் காமாட்சியம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். சங்கம் ஆண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை மற்றும் எதிர்கால திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் முத்துராஜ், துணை தலைவர் ரவி, துணை செயலாளர் சம்சுதீன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*உறுப்பினர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சியாக, செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

* 2025ஆம் ஆண்டிற்காக உலக ஒளிப்பட தினத்தை, குடும்ப விழாவாக மற்றும் சங்க ஆண்டு விழாவாக கொண்டாடப்படும்
* 2024-25 ம் ஆண்டு 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.







