• October 22, 2026

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்  

 சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்  

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.



அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பி.சண்முகம், ” 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க கோரிக்கை வைத்தோம். தனி சட்டத்திற்கான தேவையை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்தார்.



இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், “சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம். அதனை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்” என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், “ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதால் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்- அமைச்சரிடம் பேசினோம்” என்று தெரிவித்தார்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *