பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது: விஷ்ணுபுரம் சரவணனுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா

`ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற புத்தகத்திற்கு பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு கோவில்பட்டி கி.ரா.மணிமண்டபத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (த.சி.எ.க.ச). தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உருவச் சிலைக்கு விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.மாநிலத் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் தலைமை தாங்கினார்,எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்காக எழுதிய 7 புத்தகங்களை இயல் பதிப்பக உரிமையாளர் கோ.கண்ணன் வெளியிட எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.கோவில்பட்டி கிளை பொருளாளர் ஆசிரியர் கண்ணகி வரவேற்று பேசினார்.தூத்துக்குடி மாவட்டத்தலைவர் கு.இராமசுப்பு வாழ்த்துரை வழங்கினார்.
கோவில்பட்டி கிளைச் செயலாளர் கி.பிரபு,, தூத்துக்குடி கிளைச் செயலாளர் மை.வாலண்டினா, திருச்செந்தூர் கிளைச் செயலாளர் பா.பேச்சியம்மாள்,முக்காணி கிளைச் செயலாளர் மு.சண்முக வடிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
4 கிளைகளைச் சார்ந்த 8 குழந்தைகள் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய புத்தகங்கள் பற்றி பேசினார்கள். விழாவில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகள் அனைவர்க்கும் ஒற்றை சிறகு ஓவியா நூல் இலவசமாக வழங்கப்பட்டது,

விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பொன்னாடையும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. விஷ்ணு புரம் சரவணன் சிறப்புரை ஆற்றினார்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்கோவில்பட்டிகிளைத் தோழர் எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணன் நன்றி கூறினார்,







