கோவில்பட்டி கோவிலில் நாட்கால் நாட்டு விழா
கோவில்பட்டி மதித்தோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 48வது ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு நாட்கால் நடுதல் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீர கருப்பசாமிக்கு மாபொடி, மஞ்சள்பொடி, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம், தீபாராதனை மற்றும் நாட்காலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி,சந்துரு சாமி செய்தனர்.








