கோவில்பட்டியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; மகளிர் உரிமைத் தொகை கேட்டு மனுக்கள் குவிந்தன
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 18, 28 மற்றும் 29-வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கதிரேசன் கோவில் ரோடு சவுபாக்கியா திருமணமண்டபத்தில் நடந்தது.

முகாமிற்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி , பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஆணையர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முகாம் தொடங்கியதில் இருந்து, மாலை 3 மணி வரையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இத்திட்டத்தில் மட்டும் 423 பேர் மனு வழங்கி உள்ளனர். இதே போல், மின்வாரியம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

வருவாய்த்துறை 140, மாற்றுத்திறனாளிகள் துறை 7, உணவு பாதுகாப்புத்துறை 8, நகராட்சி 26, தொழிலாளர் துறை 39, எரிசக்தி துறை 17 மற்றும் இதர துறைகள் என மொத்தம் 700 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
முகாமை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாமில் நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயா, கருப்பசாமி, முத்துலட்சுமி,ஜோதிபாசு,சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







