குளத்தில் இருந்து கரம்பை மண் எடுக்க அனுமதிகோரி விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி வட்டம், பிள்ளையார் நத்தம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஆண்டி குளம் கண்மாயில் பல ஆண்டுகளாக விவசாயிகள் கரம்பை மண் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த ஊரில் மொத்தம் 2 ஆயிரம் ஏக்கர் மானவாரி நிலங்கள் உள்ளன. மேற்படி நிலங்களில் அதிக அளவு மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசி, எள், தட்டை பயிறு, கொத்தமல்லி மற்றும் நவதானிய மானவாரி பயிர்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை உழவு நடக்கிறது.
. இந்த கோடை காலத்தில் மானவாரி நிலங்களில் அரித்து செல்லப்பட்ட கரம்பை மண்ணை மீண்டும் குளங்களில் இருந்து வண்டு கட்டி எடுத்து வந்து, நிலங்களில் பரவலாக பரப்பி, இழந்த மண்ணை ஈடு செய்து, நல்ல ஊட்ட சத்து மண்ணை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவார்கள்.

இது பாரம்பரிய மண் இழப்பை தடுக்கும் செயலாக மீட்டு உருவாக்கம் செய்து வந்தார்கள். தற்போது கரம்பை மண் எடுக்க விவசாயிகளை எடுக்க தடுத்து வருகிறார்கள்.முன்பு மூன்று மாதம் வண்டி கட்டி தங்களின் விளை நிலங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வந்தார்கள். தற்போது கரம்பை எடுக்கவும் அதிகாரிகள் தடுத்து வருவதால் மண் இழப்பை சரி செய்ய முடியாமல் ஊட்டசத்தை, மண் இழப்பையும் சந்தித்து வருகிறார்கள்.
கரம்பையை கிராவல் மண் என்று நினைத்து கொள்கிறார்கள். கரம்பை வீடு கட்டவும் வேறு எந்த காரியத்திற்கும் பயன்படாது. விவசாயதிற்கும் மட்டுமே பயன்படும் என்பதை உணர்ந்து, ஆண்டிகுளம் கண்மாயில் கரம்பை மட்டுமே எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்,.

அந்த குளத்தில் இருந்து விவசாயிகள் 30 நாட்கள் மட்டும் கரம்பை மண் எடுக்க அனுமதி அளிக்குமாறு கேட்டு இன்று 7.8.2025. காலை 11 மணி அளவில் தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
முற்றுகை போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஸ்ரீ பதி, கனகராஜ், முனியசாமி, கோசல்ராம், பொன்ராஜ் மற்றும் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர்
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர், பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியரின் உதவியாளரை சந்தித்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.







