கோவில்பட்டியில் காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்

கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன் மீது கிழக்கு காவல் நிலையத்தில் பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் வழக்கறிஞர் சங்கம் முன்பு காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் சின்னமாரிமுத்து, ரவிசங்கர், போஸ், ஆழ்வார்சாமி சிவகுமார், சிவனுப்பாண்டி, முனீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அரசு அலுவலக சாலை வழியாக ஊர்வலமாக சென்று, டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு நின்று வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர் எட்டயபுரம் சாலை வழியாக ஊர்வலமாக வழக்கறிஞர் சங்கம் முன்பு ஊர்வலம் நிறைவடைந்த்தது,. வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.







