தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகிற 19.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மேற்சொன்ன தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் படிப்பு […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவிகள் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர் இம்மாணவ மாணவிகள் கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் காலை 7:15க்கு புறப்பட்டு தாப்பாத்தி7.50 மேலக்கரந்தை காலை 7.55,வெம்பூர் காலை 8 மணிக்கு வரக்கூடிய பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர். நேற்று தினம் காலை 7:55க்கு மேலக்கரந்தையிலிருந்து பந்தல்குடி செல்வதற்கு […]
கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நாளை 10-ந்தேதி ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை “சிறகுகள் 2025 “ என்ற பெயரில் வணிக கண்காட்சி நடத்தப்படுகிறது, ஜே.சி.ஐ., ஜே.காம்., ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை நடிகை சுவாதி கொண்டே தொடங்கி வைக்கிறார். ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமானவர் சுவாதி, இதன்பின் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. உலக சேமநலம் காக்கவும், மழை வேண்டியும் தொடர்ந்து, புஷ்பங்கள் தட்டு மற்றும் குடங்களில் கொண்டு வரப்பட்டு உள்பிரகாரங்களை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்துமாரியம்மன் கும்ப கலசத்தில் அலங்கரிக்கப்பட்டு வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்களுக்கு […]
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகள் […]
தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் எஸ்,ரெங்கநாயகலு விடுத்துள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவுக்கு எலுமிச்சை உற்பத்தி செய்யப்படும் கிராமம் வில்லிசேரி. இக் கிராமத்தில் நுழைந்தவுடன் எலுமிச்சை பழங்களின் வாசனை நம்மை சுண்டி இழுக்கும்.ஆயிரம் ஏக்கர் அளவுக்கு புஞ்சை நிலத்தில் எலுமிச்சை பயிர் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே எலுமிச்சை ( வில்லிசேரி ) புவி சார் குறியீடு கேட்டு மாவட்ட ஆட்சியர், மாநில முதல்வர், மத்திய அரசிடம் முறையாக மனு […]
ஆக்கி இந்தியாவின் 15 வது ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வருகிற 12 ந்தேதி முதல் 23 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது இப்பிரிவில் பஞ்சாப், மத்திய பிரதேச மாநில அணிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 49 வீரர்கள் பங்கேற்றுள்ள பயிற்சி முகாமில் தலைமை […]
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார். அந்த பயணத்தில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;-‘ ‘’பட்டாசு தொழில் நடத்துவதில் இருக்கும் சிரமத்தையும், பிரச்சினைகளையும் சொன்னீர்கள். இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் […]
கோவில்பட்டி தாலுகாஅலுவலகம் , ரெயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சந்தன குமார் (வயது 27) என்பவர்,யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் சுற்றி திரிந்தார், இது பற்றி கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜாவிற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் ஆலோசனை பெற்று இன்று காலை 11.மணியளவில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர், காவல் துறையினர் உதவியுடன் மீட்பு […]
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் குளக்கட்டாகுறிச்சி மற்றும் வரகனூர் ஊராட்சிகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குளக்கட்டாகுறிச்சி சமுதாய நல கூடத்தில் இன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வரகனூர் ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி, துணைத் தலைவர் இந்துஜா குளக்கட்டாகுறிச்சி தலைவர் .கருப்பசாமி துணைத்தலைவர் . அந்தோணிராஜ் , துணை வட்டார வளர்ச்சி. அலுவலர் சண்முகத்தாய் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். […]







