ஜலந்தரில் 12 ந்தேதி தொடங்கும் தேசிய ஆக்கி போட்டி: கோவில்பட்டியில் தமிழக அணி தேர்வு
ஆக்கி இந்தியாவின் 15 வது ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வருகிற 12 ந்தேதி முதல் 23 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது இப்பிரிவில் பஞ்சாப், மத்திய பிரதேச மாநில அணிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 49 வீரர்கள் பங்கேற்றுள்ள பயிற்சி முகாமில் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமார் துணை பயிற்சியாளர் சாமுவேல் ராஜ்குமார் ஆகியோரின் தீவிர பயிற்சி முடிவில் 18 பேர் கொண்ட தமிழக அணி ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ மனோகரன் பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-
கோல் கீப்பர்: கார்த்திகேயன், சுமன்,
தடுப்பாட்டக்காரர்கள்: குபேரன், மணிமாறன், சுகுமார், தனுஷ் பாண்டியன், அழகு மோகன பிரியன் , அருண், கௌதம், ராகுல், சீனிவாசன், மாதேஷ்,
முன்கள ஆட்டக்காரர்கள்: விஷால், பிரவீன், நந்தகுமார், ஆகாஷ், விஷ்வா ,அதிபன்,
தலைமை பயிற்சியாளர்: முத்துக்குமார்
துணை பயிற்சியாளர் சாமுவேல் ராஜ்குமார்
அணி மேலாளர்: வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன்
யு.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த வீரர்களை மனதளவில் தயார் படுத்துவதற்கு மனநல மருத்துவர் பாலாஜி சிறப்பு பயிற்சி அளித்தார். வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து உணவு வழங்கினார்.
தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆக்கி அணியின் முன்னாள் வீரர் பாலமுருகன்,பள்ளி தாளாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் குரு சித்திர சண்முக பாரதி, காளிமுத்து, பாண்டியராஜா, முருகன், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், தங்கராஜ், ஜார்ஜ், ஈஸ்டர் ராஜ்குமார், கதிரவன் ,பாலமுருகன், வேல்முருகன் ஆகியோர் தமிழக அணிக்காக தேர்வு பெற்றுள்ள வீரர்களை பாராட்டி வாழ்த்து கூறி தேசிய போட்டிக்கு வழியனுப்பி வைத்தனர்..







