2 ஊராட்சிகளில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 344 மனுக்கள் குவிந்தன

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் குளக்கட்டாகுறிச்சி மற்றும் வரகனூர் ஊராட்சிகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குளக்கட்டாகுறிச்சி சமுதாய நல கூடத்தில் இன்று நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வரகனூர் ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி, துணைத் தலைவர் இந்துஜா குளக்கட்டாகுறிச்சி தலைவர் .கருப்பசாமி துணைத்தலைவர் . அந்தோணிராஜ் , துணை வட்டார வளர்ச்சி. அலுவலர் சண்முகத்தாய் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
16 அரசு துறைகள் தொடர்பாக நலத்திட்ட உதவிகள் வேண்டி பொதுமக்கள் மொத்தம் 344 மனுக்கள் அளித்துள்ளனர்








