கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி மீட்பு
கோவில்பட்டி தாலுகாஅலுவலகம் , ரெயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சந்தன குமார் (வயது 27) என்பவர்,யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் சுற்றி திரிந்தார்,

இது பற்றி கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜாவிற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் ஆலோசனை பெற்று இன்று காலை 11.மணியளவில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர், காவல் துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்,

பார்வையற்ற மாற்று திறனாளி சந்தன்குமாரை, காப்பக நிர்வாகி தேன் ராஜா, திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் அமலி பிரகாஷ்,தொண்டு நிறுவன மேற்பர்வையாளர் மாடசாமி, செவிலியர் கற்பக மீனா, மற்றும் பொது மக்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டனர்,
பின்னர் அவரை சுத்த படுத்தி புதிய உடைகள் அணிவித்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. பார்வையற்றோர் உயர்நிலை பள்ளி காப்பகத்தில் சேர்க்க அழைத்து செல்லப்பட்டார்.







