கோவில்பட்டடி முத்துமாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.
உலக சேமநலம் காக்கவும், மழை வேண்டியும் தொடர்ந்து, புஷ்பங்கள் தட்டு மற்றும் குடங்களில் கொண்டு வரப்பட்டு உள்பிரகாரங்களை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்துமாரியம்மன் கும்ப கலசத்தில் அலங்கரிக்கப்பட்டு வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை,மஞ்சள், குங்குமம்,மாங்கல்ய சரடு,வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் செய்திருந்தனர்







