கோவில்பட்டியில் நாளை வணிக கண்காட்சி ; நடிகை சுவாதி தொடங்கி வைக்கிறார்
கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நாளை 10-ந்தேதி ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை “சிறகுகள் 2025 “ என்ற பெயரில் வணிக கண்காட்சி நடத்தப்படுகிறது,
ஜே.சி.ஐ., ஜே.காம்., ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை நடிகை சுவாதி கொண்டே தொடங்கி வைக்கிறார். ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமானவர் சுவாதி, இதன்பின் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக சுவாதி கொண்டே நடித்து வருகிறார்.

கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.உணவு பொருட்கள், ரியல் எஸ்டேட் , வீட்டு தயாரிப்பு பொருட்கள், ஐஸ்கிரீம், ஆடை வடிவமைப்பு, அழகுகலை ,பிசியோதெரபி என எண்ணற்ற அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
பார்வையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான கலைபோட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன, இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம்.
இந்த கண்காட்சி கோவில்பட்டி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்,







