தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த […]
ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும். இந்த நாளில் பக்தர்கள், பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில இலக்கிய சங்கம் (E-LIT ASSOCIATION )தொடக்க விழா நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் எஸ்.டி.செல்வசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் பா.மகேஷ் குமார் அவர்கள் தலைமை உரை வழங்கினார். சிறப்புவிருந்தினரை கவுரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் கே..ஜெயலட்சுமி வாசிக்க ஆங்கில இலக்கிய சங்க உறுப்பினர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துகொன்டனர். தொடர்ந்து, சங்கத்தின் ஆண்டறிக்கையை மாணவி பிரதிபா வாசித்தார். சிறப்பு […]
கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட 2 கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து,குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து, நீதிமன்ற வளாக பகுதியில் மரக்கன்றுகள் நட்டினார். விழாவில் சார்பு நீதிபதி மாரிக்காளை, முனிசிப் நீதிபதி கருப்பசாமி, ஜே எம் 1 நீதிபதி ஆனந்த், ஜே எம் 2 மணிமேகலை, பார்கவுன்சில் மெம்பர் […]
வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்கான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியின் மூன்றாவது நாள் லீப் போட்டியின் கடைசி நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மதுரை மாவட்ட அணி தேனி மாவட்ட அணியும் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிவு பெற்றது திருச்சி மாவட்ட அணி 3-0 என்ற கோல் […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அதன்படி 15-வது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது தமிழகத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆலங்குடியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி […]
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக மல்லை சத்யாஉண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் நெல்சன் டேவிட் (68). விவசாயி. இவர் நேற்று முன் தினம் மாலை தனது தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், நெல்சன் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருட முயற்சித்தனர். அப்போது திடுக்கிட்டு விழித்த அவர் கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2பேரும், அவரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவர் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். இந்த கோவிலில் அன்னதான உண்டியல் உள்பட 11 நிரந்தர உண்டியல்களும், தற்போது நடந்த திருவிழாவுக்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் பூஜை […]
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமர் மோடி நாளை 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறார். தொடர்ந்து, சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவர் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 80 பேர் […]







