கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில இலக்கிய சங்கம் தொடக்க விழா
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில இலக்கிய சங்கம் (E-LIT ASSOCIATION )தொடக்க விழா நடைபெற்றது.
துறைத் தலைவர் முனைவர் எஸ்.டி.செல்வசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் பா.மகேஷ் குமார் அவர்கள் தலைமை உரை வழங்கினார். சிறப்புவிருந்தினரை கவுரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் கே..ஜெயலட்சுமி வாசிக்க ஆங்கில இலக்கிய சங்க உறுப்பினர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துகொன்டனர். தொடர்ந்து, சங்கத்தின் ஆண்டறிக்கையை மாணவி பிரதிபா வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் அறிமுகத்தை மாணவி தபிதா வழங்க, கலசலிங்கம் அறிவியல் மற்றும் கல்விக் கழகத்தின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஜி,. அபிராமி சிறப்புரை ஆற்றினார்.

தொடக்கத்தில் முதலாம் ஆண்டு முதுகலை ஆங்கிலத்துறை மாணவி சு. ஜீவா நந்தினி வரவேற்று பேசினார். முடிவில் மாணவி கே. சுவேகா நன்றி கூறினார்..







