கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் 28-ந்தேதி ஆடி பூரம் வளையல் உற்சவம்
அம்மன வளையல் அலங்காரம் (பழைய படம் )
ஆடி மாதம் அம்பாளை வழிபாடு செய்வதற்கான உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில்தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும்.
இந்த நாளில் பக்தர்கள், பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். என்பது நம்பிக்கை
அதன்படி கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் ஆடி பூரம் வளையல் உற்சவ விழா 28-7-2025 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

அன்று காலை 9.25 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி காலை 10.15 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்நடக்கிறது. காலை 11.15 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது,
பின்னர் மாலை 6.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார தரிசனம் நடக்கிறது. மாலை 06.35 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
அம்மனுக்கு வளையல் கொண்டு வரும் பக்தர்கள் (27-7-2025 ஞாயிற்றுக்கிழமைக்குள் கோவிலுக்கு வந்து கொடுக்கும்படி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.







