கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட 2 கட்டிடங்களின் திறப்பு விழா
கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட 2 கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து,குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து, நீதிமன்ற வளாக பகுதியில் மரக்கன்றுகள் நட்டினார்.

விழாவில் சார்பு நீதிபதி மாரிக்காளை, முனிசிப் நீதிபதி கருப்பசாமி, ஜே எம் 1 நீதிபதி ஆனந்த், ஜே எம் 2 மணிமேகலை, பார்கவுன்சில் மெம்பர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணை செயலாளர் முனீஸ்வரி, பொருளாளர் ரேவதி, வழக்கறிஞர்கள் போஸ், ரெங்கராஜன், ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், மணிகண்டன், ஆழ்வார்சாமி சிவக்குமார், முத்துச்சாமி , சந்திரசேகர், பெஞ்சமின் , பாரதி ராஜ்மோகன், கார்த்திக், சக்திவேல் ராஜேஷ் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







