கோவில்பட்டியில் மாநில ஜூனியர் ஆக்கி: தூத்துக்குடி உள்பட 8 மாவட்ட அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி
வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்கான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியின் மூன்றாவது நாள் லீப் போட்டியின் கடைசி நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது
மதுரை மாவட்ட அணி தேனி மாவட்ட அணியும் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிவு பெற்றது திருச்சி மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணியை வீழ்த்தியது திருப்பூர் மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் கடலூர் மாவட்ட அணியை வீழ்த்தியது.

திருநெல்வேலி மாவட்ட அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை வீழ்த்தியது சிவகங்கை மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு மாவட்ட அணியை வீழ்த்தி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை மாவட்ட அணி 13-0 கோல் கணக்கில் தென்காசி மாவட்ட அணியை தோல்வி அடைய வைத்து வெற்றி பெற்றது
கோயமுத்தூர் மாவட்ட அணி 3-0 என்று போல் கணக்கில் சேலம் மாவட்ட அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது விருதுநகர் மாவட்ட அணி தர்மபுரி மாவட்ட அணியுடன் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்ததால் விருதுநகர் மாவட்ட அணி புள்ளிகளின் அடிப்படையில் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது திருவண்ணாமலை மாவட்ட அணி 1-0 என்று கோல் கணக்கில் தஞ்சாவூர் மாவட்ட அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது விழுப்புரம் மாவட்ட அணி 1-0 என்ற கோள் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியில் வீழ்த்தியது திருவள்ளூர் மாவட்ட அணி கோல் எதுவும் இன்றி நீலகிரி மாவட்ட அணியிடம் டிராவில் முடிந்தது

லீக் போட்டியின் கடைசி நாளான இன்று நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், விருதுநகர், திருவண்ணாமலை, ஆகிய 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நாளை காலை இரண்டு கால் இறுதி போட்டிகள் நடக்கின்றன. மாலையில் இரண்டு கால் இறுதிப் போட்டியில் நடைபெறும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அரை இறுதிப் போட்டிகளும் மாலை இறுதி போட்டியும் நடைபெறும். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.







