விவசாயியை தாக்கி 8½ பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் நெல்சன் டேவிட் (68). விவசாயி. இவர் நேற்று முன் தினம் மாலை தனது தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், நெல்சன் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருட முயற்சித்தனர். அப்போது திடுக்கிட்டு விழித்த அவர் கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2பேரும், அவரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவர் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு அவர்கள் தப்பி ஓடினர். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கொண்டே மர்மநபர்களை பின்தொடர்ந்து ஓடினார்,. ஆனால், அந்த 2பேரும் தப்பி ஓடிவிட்டனராம்.

இந்த நிலையில் அவரது சத்தம் கேட்டு தோட்டத்திற்குவந்த அக்கம் பக்கத்தினர் காயத்துடன் இருந்த அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விவசாயியை தாக்கி நகைகளை பறித்து சென்ற 2 மர்மநபர்களை தேடி வருகிறார்.







