தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி புனித ஓம் கல்வி நிறுவனங்கள், ஆகியவை சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 7ம் ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது. ஜூன் -4ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக் […]
ராஜீவ்காந்தி நினைவு தினம்: கோவில்பட்டியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த காங்கிரசார்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவு தினம் இன்று (மே 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி மண்டபத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை […]
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்குள் […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் தந்தை- மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசியல் […]
கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவை முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர கருணாநிதியை சந்தித்து வழங்கினர். இந்த குழுவில் சாகித்ய பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் கா.உதயசங்கர், நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு […]
தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை, தூத்துக்குடி, தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கேரளாவில் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார முழு நேர கிளை நூலகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாமின் நிறைவு விழா நூலக வளாகத்தில் நடந்தது. முகாம் நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகளுக்கான இசை நாற்காலி, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், சிலம்பாட்டம், கதை சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல் பலூன் உடைத்தல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நூலகர் மகாராஜன் வரவேற்புரை வழங்கினார் நூலகர் அம்பிகா கலந்துகொண்டார். சிறப்புவிருந்தினர்களாக எழுத்தாளர் க.உதயசங்கர், ஆசிரியை […]
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ‘அவர்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி விடுவிக்க வேண்டும். இத்திட்டத்தில் […]
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் […]
கோவில்பட்டி நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் கழுகுமலை, கயத்தார், புதூர், கடலையூர், விளாத்திகுளம் ஆகிய கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கு சமுதாய நாய்களை பிடித்தலுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர்.க.கருணாநிதி உத்திரவின் பேரில் மற்றும் நகராட்சி ஆணையாளர்.கமலா வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. விலங்குகள் நல வாரிய உதவி இயக்குநர்கள் மருத்துவர்.விஜயஸ்ரீ, கால்நடை மருத்துவர்.வி.சுப்பிரமணியன் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் மற்றும் நகர்நல அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் ஆ.இளங்கோ, துப்புரவு ஆய்வாளர் […]







