சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இளைய தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என படகுழு தெரிவித்துள்ளது. வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. அறிமுக நடிகர்கள், ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பால […]
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். […]
விருத்திமான் சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2021-ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதே இவரின் கடைசி டெஸ்ட் போட்டி. சமீபத்தில் சஹா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த ரஞ்சி சீசனில் பெங்காலுக்காக ஆடி வரும் இவர், சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டில் […]
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்வை தொடங்கிய கமல்ஹாசன், 4 தேசிய திரைப்பட விருதுகள், 9 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது , 2 பிலிம்பேர் விருதுகள் மற்றும் […]
தமிழக திரையுலகில் நடிகா் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகா்களை கொண்ட நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகத்தை ஓராண்டுக்கு முன்பே தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக வின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருப்பதும், லட்சக்கணக்கில் தொண்டா்களை திரட்டியதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில், அரசியலில் நடிகர் விஜய் வெற்றி பெறுவது கஷ்டம் என ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவரின் இல்ல நிகழ்விற்கு வருகை […]
*உடல் பயிற்சி இன்மை/ உடல் உழைப்பின்மை * இரவில் கண் விழித்திருத்தல் * காலை உணவை தவிர்த்தல் *ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம் * பணத்தை நோக்கிய ஓட்டம் * பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் *கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல் மேற்கண்ட நடவடிக்கைகள் காரணமாக மனிதனின் ஆயுட்காலம் குறையும். ஆயுட்காலம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இனிமேல் பாருங்கள்… வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள் கண்டதையும் கொட்ட நம் உடல் […]
நடிகர் நிவின் பாலி படவாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் துபாயில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 14,15 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிவின் […]
வீடற்ற ஏழைமக்களுக்கு புதிதாக வீட்டுமனை பட்டா: கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் ரஞ்சனிகண்ணம்மா, கிளைச்செயலாளர் சுரேஷ்குமார், நகரக்குழு உறுப்பினர் சண்முகவேல், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், மாதர் சங்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி,நகர துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகாக்குழு உறுப்பினர் சிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட […]
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அமரன் திரைப்படத்தை ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினர். இந்நிலையில் நடிகர் அனிருத்தும் ‘அமரன்’ படத்தை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அனிருத் வெளியிட்டிருக்கும் அப்பதிவில், “சினிமாவின் சிறப்பான திரைப்படம் ‘அமரன்’. […]