• June 8, 2025

நடிகர் கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 நடிகர் கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்வை தொடங்கிய கமல்ஹாசன், 4 தேசிய திரைப்பட விருதுகள், 9 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது , 2 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 18 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். 1984-ல் கலைமாமணி விருது , 1990-ல் பத்மஸ்ரீ, 2014-ல் பத்ம பூஷன் மற்றும் 2016-ல் ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் (செவாலியே ) விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்திய திரையுலகின் வாயிற்கதவுகளை திறக்கின்ற கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவு கருத்துகளை பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!’ என குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *