• June 8, 2025

Month: October 2024

கோவில்பட்டி

கயத்தாறு மைதானத்தில்  மாவட்ட ஆக்கி லீக் போட்டி நடத்த முடிவு

ஆக்கி  யூனிட் ஆப் தூத்துக்குடி பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது பொதுக்குழு கூட்டத்திற்கு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் தலைமை தாங்கினார். கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பொன்ராஜ் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர்  முன்னிலை  வகித்தனர் சட்ட ஆலோசகர் பெரியதுரை அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-  *தூத்துக்குடி மாவட்ட ஆக்கி லீக் போட்டி புதிதாக அமைக்கப்பட்ட […]

செய்திகள்

விஜய் கட்சி  மாநாடு – 234  தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமனம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை […]

சினிமா

எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் பேச வேண்டாம் – நடிகர் ஜெயம்

நடிகர் ஜெயம் ரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எழும் விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- சினிமாவை பற்றி ஆயிரம் விஷயங்கள் சொல்லுங்கள். நான் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லுங்கள், நன்றாக நடித்துள்ளேன் என்று சொல்லுங்கள். அந்த விருதுக்கு நான் தகுதி இல்லாதவன் என்று சொல்லுங்கள் அதை நான் கேட்டுக் கொள்வேன். சரி அடுத்த படத்தில் சிறப்பாக செய்வோம் என்று மாற்றிக் கொள்வேன். ஆனால், என்னுடைய தனிப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில்  குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி ராயல் மருத்துவமனை  சார்பில் கோவில்பட்டி ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாம் தொடக்க நிகழச்சிக்கு  ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ்,சாலை பாதுகாப்பு பிரிவு சேர்மன் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி ,இணை செயலாளர் பழனிக்குமார், நிர்வாகிகள் சீனிவாசன்,பாபு, நாராயணசாமி,வீராச்சாமி,முத்து முருகன்,ராஜ்குமார்,ராஜேந்திரன்,பூல் பாண்டி,நடராஜன்,மாரியப்பன், உள்ளிட்ட […]

கோவில்பட்டி

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின்  ஒன்றியக்குழுவின் 9-வது மாநாடு  நடந்தது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் ஜவகர் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி,ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- * 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, அரசு அறிவித்த கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும். * விவசாயிகளுக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழாவின் கடைசி நாளில் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்

தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கியது. இதில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று  புத்தகக் கண்காட்சியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி மகிழந்தார். தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவில், புகைப்படங்கள் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கனிமொழி கருணநிதி எம்.பி கண்டு மகிழ்ந்தார். தூத்துக்குடியின் கலாசாரம், […]

சினிமா

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜ்

மஞ்சுமெல் பாய்ஸ் படமானது கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. மேலும் வசூலிலும் இப்படம் சாதனை படைத்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சவுபின் சாகிர்.,தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சவுபின் சாகிர். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு […]

சினிமா

சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பொன்ராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம்.,மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார்,காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சண்முக […]

சினிமா

புதிய உச்சத்தை தொட்ட ரஜினி படத்தின் பாடல்: தொடர்ந்து யூடியூபில் டிரெண்டிங்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் யூடியூபில் […]